வெள்ளி, 8 ஜனவரி, 2021

சிறு சிறு உடல் உபாதைகளுக்கான எளிய வீட்டு மருந்து

 சிறு சிறு உடல் உபாதைகளுக்கான எளிய வீட்டு மருந்து 

சுளுக்கு வலி நீங்க:

    உப்பு, புளியை கரைத்து கொதிக்க வைத்து பின் இறக்கி ஆறியவுடன் பற்றுப் போட வீக்கம்,ரத்தக் கட்டு குணமாகும்.

பல்வலி மருந்து:

    பூச்சிப் பல் இருப்பவகர்கள் கிராம்பை அவ்விடத்தில் தூளாக்கி வைத்தால் வலி நீங்கும்.

நரம்புத் தளர்ச்சி நீங்க:

    அத்திப்பழம் தினந்தோறும் ஐந்து சாப்பிட்டு வந்தால் நரம்பு தளர்ச்சி நீங்கி விடும்.

மூலம்:

    பப்பாளி பழம் சாப்பிட்டு வந்தால் மலச்சிக்கல்  நீங்கும். அதன் பிறகு வெந்தயம் சிறிதளவு சாப்பிட வேண்டும். இப்படி செய்தால் மூலம் குணமாகும்.

பசி உண்டாக:

    சீரகத்தை பொன் வறுவலாக வறுத்து பொடி செய்து சூரணமாக பனை வெல்லத்துடன் சேர்த்து சாப்பிட்டு வந்தால் பசி உண்டாகும்.

நெஞ்சு சளி நீங்க:

    தேங்காய் எண்ணெய்யில் கற்பூரம் சேர்த்து சுட வைத்து நெஞ்சில் தடவ நெஞ்சு சளி குணமாகும்.

தொண்டை கரகரப்பு குனமாக:

    சுக்கு,பால்,மிளகு,திப்பிலி,ஏலரிசி வறுத்து பொடி செய்து தேனில் கலந்து சாப்பிட்டால் தொண்டை கரகரப்பு குணமாகும்.

நல்ல தூக்கம் வர:

    சீரகத்தை வறுத்து பொடி செய்து வாழைப்பழத்துடன் சப்பிட்டால் நித்திரை வரும்.

குடல் புண் குணமாக:

    தினமும் ஒரு டம்ளர் திராட்சைப் பழச் சாரு குடித்து வர அல்சர் நீங்கும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக

Thank you for you comments.

மருதாணி

  சர்க்கரை நோய் ஏற்படுவதற்கும் மருதாணி வைக்கும் பழக்கம் குறைந்ததும் ஓர் காரணம் ஆகும் ..... உடல் குளிர்சியாக இருக்கும் போது மட்டுமே கணையம் இன...