சர்க்கரை நோய் ஏற்படுவதற்கும் மருதாணி வைக்கும் பழக்கம் குறைந்ததும் ஓர் காரணம் ஆகும் .....
இரத்த சீர்கேடுகள் தான் எயிட்ஸ் புற்றுநோய் சர்க்கரை நோய் என அனைத்து வியாதிகளுக்கும் காரணம் என்பதையும் நாம் அறிவோம் அதனால் தான் பால்வினை நோய் குஷ்டரோகம் போன்ற நோய்களுக்கு இதன் வேர் பட்டைகளை கசாயமாக பயன்படுத்த காரணம் இது இரத்ததில் உள்ள கிருமிகளை அழித்து உள்ளுறுப்புகளுக்கு ஊட்டத்தை வழங்குகிறது என்பதால் தான்
இதனை 48 நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் உள்ளுறுப்புகள் வளமை பெறுவதால் தான் இது கற்பமூலிகை....
மருதாணியை உள்ளங்கை உள்ளங்காலில் இடுவதற்கான காரணம் அங்கு அமைந்திருக்கும் சக்கரங்கள் வழியாக ஊட்டச்சத்துக்கள் கடத்தபடுகிறது குறிப்பாக காஸ்மிக் கதிர்களை உள்வாங்கும் சக்தி இந்த மருதாணிக்கு இருக்க கூடும் ஏனெனில் பவுர்ணமி அன்று மருதாணி இட்டால் ஒருமணி நேரத்தில் சிவக்கும் சிவப்பு பத்து நிமிடங்களில் சிவந்தும் போகும்(இது எனது சுய அனுபவம் உணர்ந்த ஒன்று) காஸ்மிக் கதிர்வீச்சு பவுர்ணமி அன்று தான் அதிகம் இருக்கும் என்று நவீன விஞ்ஞானம் ஒப்புகொள்கிறது நமது பண்டைய திருவிழாக்கள் பெரும்பாலும் பவுர்ணமி இரவில் நடைபெறுவதற்கு காரணமே இந்த காஸ்மிக் கதிரியக்கத்தை உணர்ந்த்தால் தான் அவ்வாறு செய்திருக்க கூடும் மனநோய்க்கு மருதாணி சிறந்த மருந்து என்ற குறிப்புகளையும் உற்று நோக்கியதால் உணர்ந்த ஒன்று இதை பற்றி பெறிய ஆய்வே செய்யலாம் சரி விசயத்திற்கு வருவோம் ....
இந்த மருதாணியில் நிறைய மருத்துவ குணங்கள் நிறைத்துள்ளது. இதன் பூ, இலை, விதை, பட்டை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை.
உறக்கமின்மைக்கு நாம் உறக்க மருந்துகளை பயன்படுத்துவது வழக்கம்.இது ஒரு தவறான பழக்கம் உறக்க மருந்துகளது பாவனையினால் நமக்கு நரம்பு தளர்ச்சி ஏற்ப்படும் .மனஅழுத்தம் உருவாகி நாளடைவில் புத்தி பேதலித்து விடும் வாய்ப்பும் இருக்கிறது.
இந்த பிரச்சனைகளை தவிர்க்க நாம் மருதாணியை பயன்படுத்தலாம் மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றிலையணையின் கீழ் வைத்து தூங்கச் சென்றால் நல்ல தூக்கம் வரும் பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும்.
மேலும் மூளையில் ஏற்பட்ட சூட்டை தணித்து உடலுக்கும், மனத்திற்கும் புத்துணர்வை ஏற்படுத்தும்.
மருதாணியினை இட்டுக்கொண்டால் மனஅழுத்தம் குறைவதாக மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் தான் வயது வித்தியாசமின்றி மருதாணி வைக்கும் வழக்கம் அக்காலத்திலிருந்து இன்று வரை தொடருகிறது.
மருதாணியின் தைலம் முடிவளர ஏற்றது. இதன் தைலத்தை ஒவ்வொரு நாளும் தலைக்கு தேய்க்க முடி வளருவதோடு இள நரை அகலும். புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீமூ தெரபி சிகிச்சை அளிக்கும்போது நோயாளிகளின் தலையில் உள்ள முடிகள் உதிர்ந்துவிடுகின்றன. இந்த முடியில்லா குறை தெரியாமல் இருக்க தலையில் பல வடிவங்களில் மருதாணி இட்டுக் கொண்டால் அது நலம் தரும் .
மருதாணி இலை கிருமி நாசினி.கண்ணுக்குப் புலப்படாத பல கிருமிகளை அழிக்க வல்லது இதனால் தான் நகசுத்தியை தடுக்க நம் முன்னோர்கள் நகங்களின் மீது மருதோன்றி இலையை அரைத்து பற்று போட்டார்கள். நகங்கள் அழகாவதோடு நகக்கண்களில் ஏற்படும் நகச்சுற்று, புண், சொத்தை இவற்றைப் போக்கும் குணமுடையது.
நகங்களைப் பாதுகாக்கும் அரணாக மருதாணி காணப்படுவதால் நகக்கண்ணில் புண் அல்லது நகச் சுற்று ஏற்பட்டவர்கள் இரசாயன மருந்துகளை பயன்படுத்துவதை தவிர்த்து மருதாணி இலையை அரைத்து நகத்தின் மீது பற்று போட்டால் நகக் கண்ணில் ஏற்பட்ட புண்கள் உடனடியாக குணமாகும்.
நகசுத்தியை மட்டுமல்ல உடலில் உருவாகும் சகல புண்களையும் ஆற்றவும் நல்ல மருந்தாக மருதாணி பயன்படுகிறது ஆறாத வாய்ப்புண், அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம் . அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம். கட்டிகளுக்கும் அரைத்துப்பற்றிடலாம்.
கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி னால் 3-5 நாளில் புண்கள் குணமாகும் இதன் வேர்ப் பட்டையை அரைத்துப் பற்றிட கால் ஆணி, புண் குணமாகும்.
மருதாணி விதையிலுள்ள எண்ணெயை உடம்பின் மீது தடவி வந்தால் உடலில் எரிச்சல் தணிந்து குளிர்ச்சியாக்கும். கோடை வெயிலை தவிர்க்க உதவும் .
மருதாணியின் பூக்களால் குஷ்ட நோயான தொழு நோயை குணப்படுத்தலாம். வாதம், பித்தம் சம்பந்தப்பட்ட நோயைப் போக்கும் குணம் மருதாணிக்கு உண்டு.
மருதாணியின் வேர், பட்டையை அரைத்து பாலில் கலந்து காலையில் அருந்தி வந்தால் அதிக ரத்தப்போக்கு குணமாகும். பித்தத்தைத் தணித்து உடல் நிலையை சீராக்க உதவும்.
கை கால்களில் எரிச்சல் மற்றும் அரிப்பு உண்டாவதை தடுக்க மருதாணி இலையை நன்கு நீர்விட்டு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து கை கால்களிலும், உள்ளங்கால்களிலும் தேய்த்து வந்தால் கை கால் எரிச்சல் உடனே நீங்கும்.
பாலியல் நோய்களால் தாக்கப்பட்டவர்கள் மருதாணி இலை 6 கிராம், பூண்டுப்பல் 1, நல்ல மிளகு 5 இவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து காலை வேளையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் மேக நோய்களின் பாதிப்புகள் நீங்கும். அதேநேரம் இக்காலங்களில் உணவில் அதிக காரம், புளி சேர்க்காமல் உப்பில்லாமல் சாப்பிடவேண்டும் அப்பொழுது தான் முழுப்பலன் கிடைக்கும்.
மருதாணி இலையை நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி அதனை சுளுக்கு மற்றும் சிறு காயங்கள் ஏற்பட்ட இடத்தில் இட்டால் விரைவில் குணமாகும்.
இப்படி எண்ணற்ற மருத்துவப் பயன்களைக் கொண்டது மருதாணி தற்போது யாரும் அதிகமாக மருதாணியை பயன்படுத்துவதில்லை. ரெடிமேடாக செய்த மெகந்தியை தான் அனைவரும் பயன்படுத்துகின்றனர். பவுடராக வரும் இந்த மருதாணியில்,அதன் மருத்துவ குணக்கள் பெரும்பாலும் அழிக்கப்பட்டே வருகின்றது.
முடிந்த அளவு மருதாணி தலைகளை பறித்து உபயோகப்படுத்த வேண்டும். அப்பொழுது தான் அழகுடன் ஆரோக்கியத்தையும் பெறலாம்.
மருதாணியை ஆண் பெண் குழந்தைகள் என அனைவரும் பயன்படுத்துங்கள் அதன் மூலம் உடலில் உள்ள பித்தத்தை வெளியேற்றி நோய்கள் அண்டாத உடலை பேணுங்கள் ....
மருதோன்றி என்று பெயர் வரகாரணம் சித்தர்கள் இதை பயன் படுத்தி ஒரிடத்தில் இருந்து இன்னோர் இடத்தில் தோன்றியதால் தான் என்ற செவிவழி செய்தியும் உண்டு.....
இதன் அருமை பெருமைகளை உணர்ந்தவர்கள் மேலாதிக்க விபரங்களை தெரிவித்தால் அனைவரும் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் .....!
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக
Thank you for you comments.