வியாழன், 22 டிசம்பர், 2022

மருதாணி

 சர்க்கரை நோய் ஏற்படுவதற்கும் மருதாணி வைக்கும் பழக்கம் குறைந்ததும் ஓர் காரணம் ஆகும் .....

உடல் குளிர்சியாக இருக்கும் போது மட்டுமே கணையம் இன்சுலினை சுரக்க இயலும் உடலில் வெப்பம் அதிகமானால் இன்சுலின் சுரப்பு குறையும் என்பதை நாம் அறிவோம் உடலில் உள்ள வெப்பத்தை பித்தத்தை குறைப்பதில் முதன்மையான மூலிகை மருதோன்றி எனப்படும் மருதாணி இது ஓர் கற்பமூலிகையாகும் ......
இரத்த சீர்கேடுகள் தான் எயிட்ஸ் புற்றுநோய் சர்க்கரை நோய் என அனைத்து வியாதிகளுக்கும் காரணம் என்பதையும் நாம் அறிவோம் அதனால் தான் பால்வினை நோய் குஷ்டரோகம் போன்ற நோய்களுக்கு இதன் வேர் பட்டைகளை கசாயமாக பயன்படுத்த காரணம் இது இரத்ததில் உள்ள கிருமிகளை அழித்து உள்ளுறுப்புகளுக்கு ஊட்டத்தை வழங்குகிறது என்பதால் தான்
இதனை 48 நாட்கள் தொடர்ந்து பயன்படுத்தி வந்தால் உள்ளுறுப்புகள் வளமை பெறுவதால் தான் இது கற்பமூலிகை....
மருதாணியை உள்ளங்கை உள்ளங்காலில் இடுவதற்கான காரணம் அங்கு அமைந்திருக்கும் சக்கரங்கள் வழியாக ஊட்டச்சத்துக்கள் கடத்தபடுகிறது குறிப்பாக காஸ்மிக் கதிர்களை உள்வாங்கும் சக்தி இந்த மருதாணிக்கு இருக்க கூடும் ஏனெனில் பவுர்ணமி அன்று மருதாணி இட்டால் ஒருமணி நேரத்தில் சிவக்கும் சிவப்பு பத்து நிமிடங்களில் சிவந்தும் போகும்(இது எனது சுய அனுபவம் உணர்ந்த ஒன்று) காஸ்மிக் கதிர்வீச்சு பவுர்ணமி அன்று தான் அதிகம் இருக்கும் என்று நவீன விஞ்ஞானம் ஒப்புகொள்கிறது நமது பண்டைய திருவிழாக்கள் பெரும்பாலும் பவுர்ணமி இரவில் நடைபெறுவதற்கு காரணமே இந்த காஸ்மிக் கதிரியக்கத்தை உணர்ந்த்தால் தான் அவ்வாறு செய்திருக்க கூடும் மனநோய்க்கு மருதாணி சிறந்த மருந்து என்ற குறிப்புகளையும் உற்று நோக்கியதால் உணர்ந்த ஒன்று இதை பற்றி பெறிய ஆய்வே செய்யலாம் சரி விசயத்திற்கு வருவோம் ....
இந்த மருதாணியில் நிறைய மருத்துவ குணங்கள் நிறைத்துள்ளது. இதன் பூ, இலை, விதை, பட்டை, வேர் அனைத்தும் மருத்துவக் குணம் கொண்டவை.
உறக்கமின்மைக்கு நாம் உறக்க மருந்துகளை பயன்படுத்துவது வழக்கம்.இது ஒரு தவறான பழக்கம் உறக்க மருந்துகளது பாவனையினால் நமக்கு நரம்பு தளர்ச்சி ஏற்ப்படும் .மனஅழுத்தம் உருவாகி நாளடைவில் புத்தி பேதலித்து விடும் வாய்ப்பும் இருக்கிறது.
இந்த பிரச்சனைகளை தவிர்க்க நாம் மருதாணியை பயன்படுத்தலாம் மருதாணிப் பூவினை ஒரு துணியில் சுற்றிலையணையின் கீழ் வைத்து தூங்கச் சென்றால் நல்ல தூக்கம் வரும் பூவின் மணம் தூக்கத்தை வரவழைக்கும்.
மேலும் மூளையில் ஏற்பட்ட சூட்டை தணித்து உடலுக்கும், மனத்திற்கும் புத்துணர்வை ஏற்படுத்தும்.
மருதாணியினை இட்டுக்கொண்டால் மனஅழுத்தம் குறைவதாக மனோதத்துவ நிபுணர்கள் கூறுகின்றனர். இதனால் தான் வயது வித்தியாசமின்றி மருதாணி வைக்கும் வழக்கம் அக்காலத்திலிருந்து இன்று வரை தொடருகிறது.
மருதாணியின் தைலம் முடிவளர ஏற்றது. இதன் தைலத்தை ஒவ்வொரு நாளும் தலைக்கு தேய்க்க முடி வளருவதோடு இள நரை அகலும். புற்று நோயால் பாதிக்கப்பட்டவர்களுக்கு கீமூ தெரபி சிகிச்சை அளிக்கும்போது நோயாளிகளின் தலையில் உள்ள முடிகள் உதிர்ந்துவிடுகின்றன. இந்த முடியில்லா குறை தெரியாமல் இருக்க தலையில் பல வடிவங்களில் மருதாணி இட்டுக் கொண்டால் அது நலம் தரும் .
மருதாணி இலை கிருமி நாசினி.கண்ணுக்குப் புலப்படாத பல கிருமிகளை அழிக்க வல்லது இதனால் தான் நகசுத்தியை தடுக்க நம் முன்னோர்கள் நகங்களின் மீது மருதோன்றி இலையை அரைத்து பற்று போட்டார்கள். நகங்கள் அழகாவதோடு நகக்கண்களில் ஏற்படும் நகச்சுற்று, புண், சொத்தை இவற்றைப் போக்கும் குணமுடையது.
நகங்களைப் பாதுகாக்கும் அரணாக மருதாணி காணப்படுவதால் நகக்கண்ணில் புண் அல்லது நகச் சுற்று ஏற்பட்டவர்கள் இரசாயன மருந்துகளை பயன்படுத்துவதை தவிர்த்து மருதாணி இலையை அரைத்து நகத்தின் மீது பற்று போட்டால் நகக் கண்ணில் ஏற்பட்ட புண்கள் உடனடியாக குணமாகும்.
நகசுத்தியை மட்டுமல்ல உடலில் உருவாகும் சகல புண்களையும் ஆற்றவும் நல்ல மருந்தாக மருதாணி பயன்படுகிறது ஆறாத வாய்ப்புண், அம்மைப் புண் ஆகியவற்றிற்கு இதன் இலையை அரைத்து நீரில் கரைத்து வடித்து வாய் கொப்பளிக்கலாம் . அரைத்து அம்மைப் புண்களுக்குப் பூசலாம். கட்டிகளுக்கும் அரைத்துப்பற்றிடலாம்.
கை, கால், விரல் நகங்களுக்கு அரைத்துப் பூசி னால் 3-5 நாளில் புண்கள் குணமாகும் இதன் வேர்ப் பட்டையை அரைத்துப் பற்றிட கால் ஆணி, புண் குணமாகும்.
மருதாணி விதையிலுள்ள எண்ணெயை உடம்பின் மீது தடவி வந்தால் உடலில் எரிச்சல் தணிந்து குளிர்ச்சியாக்கும். கோடை வெயிலை தவிர்க்க உதவும் .
மருதாணியின் பூக்களால் குஷ்ட நோயான தொழு நோயை குணப்படுத்தலாம். வாதம், பித்தம் சம்பந்தப்பட்ட நோயைப் போக்கும் குணம் மருதாணிக்கு உண்டு.
மருதாணியின் வேர், பட்டையை அரைத்து பாலில் கலந்து காலையில் அருந்தி வந்தால் அதிக ரத்தப்போக்கு குணமாகும். பித்தத்தைத் தணித்து உடல் நிலையை சீராக்க உதவும்.
கை கால்களில் எரிச்சல் மற்றும் அரிப்பு உண்டாவதை தடுக்க மருதாணி இலையை நன்கு நீர்விட்டு அரைத்து அதனுடன் எலுமிச்சம் பழச்சாறு கலந்து கை கால்களிலும், உள்ளங்கால்களிலும் தேய்த்து வந்தால் கை கால் எரிச்சல் உடனே நீங்கும்.
பாலியல் நோய்களால் தாக்கப்பட்டவர்கள் மருதாணி இலை 6 கிராம், பூண்டுப்பல் 1, நல்ல மிளகு 5 இவற்றை ஒன்றாக சேர்த்து அரைத்து காலை வேளையில் மட்டும் சாப்பிட்டு வந்தால் மேக நோய்களின் பாதிப்புகள் நீங்கும். அதேநேரம் இக்காலங்களில் உணவில் அதிக காரம், புளி சேர்க்காமல் உப்பில்லாமல் சாப்பிடவேண்டும் அப்பொழுது தான் முழுப்பலன் கிடைக்கும்.
மருதாணி இலையை நீரில் இரவு முழுவதும் ஊறவைத்து மறுநாள் காலையில் கொதிக்க வைத்து கஷாயமாக்கி அதனை சுளுக்கு மற்றும் சிறு காயங்கள் ஏற்பட்ட இடத்தில் இட்டால் விரைவில் குணமாகும்.
இப்படி எண்ணற்ற மருத்துவப் பயன்களைக் கொண்டது மருதாணி தற்போது யாரும் அதிகமாக மருதாணியை பயன்படுத்துவதில்லை. ரெடிமேடாக செய்த மெகந்தியை தான் அனைவரும் பயன்படுத்துகின்றனர். பவுடராக வரும் இந்த மருதாணியில்,அதன் மருத்துவ குணக்கள் பெரும்பாலும் அழிக்கப்பட்டே வருகின்றது.
முடிந்த அளவு மருதாணி தலைகளை பறித்து உபயோகப்படுத்த வேண்டும். அப்பொழுது தான் அழகுடன் ஆரோக்கியத்தையும் பெறலாம்.
மருதாணியை ஆண் பெண் குழந்தைகள் என அனைவரும் பயன்படுத்துங்கள் அதன் மூலம் உடலில் உள்ள பித்தத்தை வெளியேற்றி நோய்கள் அண்டாத உடலை பேணுங்கள் ....
மருதோன்றி என்று பெயர் வரகாரணம் சித்தர்கள் இதை பயன் படுத்தி ஒரிடத்தில் இருந்து இன்னோர் இடத்தில் தோன்றியதால் தான் என்ற செவிவழி செய்தியும் உண்டு.....
இதன் அருமை பெருமைகளை உணர்ந்தவர்கள் மேலாதிக்க விபரங்களை தெரிவித்தால் அனைவரும் அறிந்து கொள்ள ஏதுவாக இருக்கும் .....!

வியாழன், 28 அக்டோபர், 2021

தூதுவளை மருத்துவ குறிப்பு

 தூதுவளை ஒரு அற்புதமான மூலிகையாகும். தூதுவளை கசப்பு மற்றும் காரச்சுவை உடையது. இருமல், இரைப்பு போன்ற நோய்களுக்கு நல்ல மருந்தாகும். இலை உடலை தேற்றும். பூ உடலை பலப்படுத்தும். பசியைத்தூண்டும். மலச்சிக்கலை போக்கும்.

மார்புச்சளி, மார்புவலி ஆகியவற்றை தூதுவளை பழம் குணமாக்கும்.  ஒரு கைப்பிடி தூதுவளை இலைகளை 2 தம்ளர் தண்ணீரில் போட்டு ஒரு தம்ளராக வரும் வரை சுண்டக் காய்ச்சி வடிகட்டி குடித்து வந்தால் இரைப்பு இருமல் நோய்கள் தீரும்.

ஒரு கைப்பிடி இலைகளை அதே அளவு வெங்காயத்துடன் சேர்த்து நல்லெண்ணையில் வதக்கி துவையலாக்கி சாப்பிட்டு வரலாம். இதே போல் 3 நாட்கள் சாப்பிட வேண்டும். பின்னர் 3 நாட்கள் விட்டு அடுத்த 3 நாட்கள் சாப்பிட வேண்டும். இவ்வாறு 21 நாட்கள் சாப்பிட்டு வந்தால் இரைப்பு, இருமல் குணமாகும்.

https://srinidhixerox.live/


செவ்வாய், 8 ஜூன், 2021

#மூச்சுபயிற்சி

 #மூச்சுபயிற்சி

கபாலத்தில் சளிக்குற்றமும் அடிவயிற்றில் மலக்குற்றமும் இல்லாமல் இருக்க காலையில் திரிகடுகும், மாலையில் திரிபாலாவும் தினமும் எடுத்துக்கொள்ளலாம் **

" இறைப்பை சுருக்கியும் நுரைப்பை விரிந்தும் இருப்பதே நீண்ட ஆயுள் "
' சூரியன் பார்க்க எழாமலும் சூரியனைப் பார்க்க எழுவதுமே நலம் '
மூச்சுப் பயிற்சி மூலம் சுவாசத்தை குறைக்க பழகிக் கொண்டால் ஆயுள் கூடும். நமது இடது நாசி சந்திரகலை.
அதில் வரும் காற்று குளிர்ச்சியாக இருக்கும்.
வலது நாசி சூரியகலை. அதில் வரும் காற்று உஷ்ணமாக இருக்கும்.
இரண்டு நாசிகளிலும் மூச்சுக் காற்று வந்தால் சுழிமுனை என்பர்.
பொதுவாக மழைக் காலங்களில் இயற்கையாகவே சூரியகலையில் ஓடும்.
அதிக வெயில்அடிக்கும் போது சந்திரகலையில் ஓடும்.
இது இயற்கையாகவே நடக்கும் அற்புதமாகும்.
ஏனெனில் உடலில் சூடும் குளிர்ச்சியும் சமநிலையில் இருக்க வேண்டும்.
இதில்எந்த குறைபாடு நேர்ந்தாலும் நமது உடலில் பல உபாதைகள் ஏற்படும்.
ஒருவருக்கு சூரியகலையில் சுவாசம் தொடர்ந்து மூன்று நாட்கள் ஓடினால் ஒரு வருடத்தில் மரணம் சம்பவிக்கும்.
ஒரே நாசியில் பத்து நாட்கள் தொடர்ந்து ஓடினால் மூன்று மாதங்களில் மரணம் சம்பவிக்கும்.
மூச்சுப்பயிற்சி மூலம் சுவாசத்தை குறைக்க பழகிக் கொண்டால் ஆயுள் கூடும்.
சுவாசம் அதிகரிக்க அதிகரிக்க ஆயுள் குறையும்.
சுவாசத்தை அடக்குவதால் ஆமைகளும் பாம்புகளும் அதிக நாட்கள் உயிருடன் வாழ்கின்றன.
நாம் நடக்கும் போது 16 அங்குலமும், அமர்ந்திருக்கும் போது 12 அங்குலமும், ஓடும் போது 25 அங்குலமும், உறங்கும் போது 36 அங்குலமும், உடல்உறவு கொள்ளும் போது 64 அங்குலமும் சுவாசம் நடைபெறுகிறது.
சுவாசம்...
11 அங்குலமாக குறைந்தால் உலக இச்சை நீங்கும்.
10 அங்குலமாக குறைந்தால் ஞானம் உண்டாகும்.
9 அங்குலமாக குறைந்தால் விவேகி ஆவான்.
8 அங்குலமாக குறைந்தால் தூர திருஷ்டி காண்பான்.
7 அங்குலமாக குறைந்தால் ஆறு சாஸ்திரங்கள் அறிவான்.
6அங்குலமாக குறைந்தால் ஆகாய நிலை அறிவான்.
5 அங்குலமாக குறைந்தால் காய சித்து உண்டாகும்.
4 அங்குலமாக குறைந்தால் அட்டமா சித்து உண்டாகும்.
3 அங்குலமாக குறைந்தால் நவ கண்ட சஞ்சாரம் உண்டாகும்.
2 அங்குலமாக குறைந்தால் கூடுவிட்டு கூடுபாய்தல் சித்திக்கும்.
1 அங்குலமாக குறைந்தால் ஆன்ம தரிசனம், உதித்த இடத்தில் நிலைத்தல், சமாதி நிலை அன்னபாணம் நீங்கும்.
சந்திரகலை என்றால் என்ன?
இடது நாசிச்(.இடது பக்க மூக்கு) சுவாசம் சந்திரகலை எனவும், வலது நாசிச்( .வலது பக்க மூக்கு) சுவாசம் சூரியகலைஎனவும் அழைக்கப்படும்.
சந்திரகலையை மதி/இடகலை/
இடைக்கால்எனவும், சூரியகலையை பிங்கலை/பின்கலை/வலக்கால் எனவும் அழைக்கப்படுவதுண்டு.
இங்கு ‘கால்’ என்பது மூச்சைக் குறித்து நிற்கின்றது.
அதனால் தான் ‘காலனைக் காலால் உதைத்தேன்’ எனச் சித்தர்களும் ஞானியரும் கூறுவதுண்டு.
இங்கு காலனாகிய இறப்பை, காலாகிய மூச்சுக்காற்றைச் சுழிமுனையில் ஒடுங்கச் செய்வதன் மூலம் பிறவிப்பிணி நீங்கி ஒளியுடம்பு பெற்று மரணமில்லாப் பெருவாழ்வு/சகாக்கலை அடைதலைக் குறிக்கும்.
‘விதியை மதியால் வெல்லலாம்’ என்பார்கள்.
இங்கு மதி என்று கூறப்படுவது புத்தி அல்ல. மதி என்றால் சந்திரன்.
16 அங்குலம் ஓடக்கூடிய சந்திரகலையை சுருக்க சுருக்க ஆயுள் விருத்தியாகும்.எனவே விதி முடிவும் விலகியே போகும்.
ஒரு நிமிடத்திற்கு 15 மூச்சு; மூச்சை உள்ளே இழுப்பது ஒரு பங்கு, நேரம் .
உள்ளே அதை தங்கவைப்பது 4 பங்கு நேரம். மூச்சை வெளியே விடுவது 2 பங்கு நேரம்.
இதுதான் பிராணாயாமத்தின்
சாராம்சம்.
நமது நுரையீரலில் வலது, இடது என இரு பகுதிகள்.
வலது நுரையீரலில் 3 பகுதிகள், இடது நுரையீரலில் 2 பகுதிகள். நுரையீரல் ‘ஸ்பாஞ்’ போல காற்றுப் பைகளால் ஆனது.
வலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது, வலது நுரையீரலில் உள்ள 3 பகுதிகளும் அழுத்தப்பட்டு இடது நாசி வழியாக மூச்சுக்காற்று ஒரே சீராக உள்ளிழுக்கப்பட்டு உடல் முழுக்க ‘பிராணா’ சக்தி சீராகப் பரவுகிறது .
இடது நாசி வழியாக ஓடும் மூச்சு , ‘சந்திரகலை’. இது குளுமையானது .
வலது நாசி வழியாக ஓடும் மூச்சு , ‘சூரியகலை’. இது வெப்பமானது.
வலதுபக்கம் சாய்ந்து படுக்கும்போது குளுமையான ‘சந்திரகலை’ அதிகரிக்கும்.
இது மன படபடப்பைக் குறைத்து தூக்கத்தையும் வரவழைக்கும்.
"ஆரோக்ய வாழ்வுக்கு மூச்சுப்பயிற்சி அவசியம் "
- உங்கள் நலங்கருதி -



தூங்கும் முறை

 தூங்கும் முறை பற்றி சித்தர்கள் என்ன சொல்கிறார்கள்...

இரவில் தூங்கும் போதுதான் உடலின் வளர்ச்சி அதிகரிக்கின்றது என்று இன்றைய அறிவியலாளர்கள் கூறுகின்றனர்.
தூங்குவதைப் பற்றியும் அதில் உள்ள அறிவியல் உண்மைகளையும் சித்தர் பெருமக்கள் தங்கள் நூல்களில் வடித்துள்ளனர்.
தூங்குவதற்கு ஏற்ற காலம் இரவு மட்டும் தான் என்பது இயற்கையின் விதிகளில் ஒன்று. பூமியின் தட்ப வெட்ப நிலைகள் மாறி இரவில் குளிர்ச்சி பொருந்திய சூழ்நிலைதான் தூங்குவதற்கு ஏற்ற காலமாகும். ஆனால் இன்றைய நாகரீக உலகில் இணையதள நிறுவனங்களில் வேலை பார்க்கும் பலரும் இரவில் கண் விழித்து பகலில் தூங்குகின்றனர். இதனால் என்ன தீமைகள் விளையும் என்பது பற்றி சித்தர் பாடல் ஒன்று.
" சித்த மயக்கஞ் செறியும் புலத்தயக்க மெத்தனுக்
கமைந்த மென்பவை களித்தமுற வண்டுஞ் சிலரை
நாயாய்ப் பன்னோய் கவ்வுமிராக் கண்டுஞ் சிலரை
நம்பிக் காண் "
இதன் விளக்கம் :-
இரவில் நித்திரை செய்யாதவர்களிடத்தில் புத்தி மயக்கம், தெளிவின்மை, ஐம்புலன்களில் [உடலில்]சோர்வு, பயம், படபடப்பு, அக்னி மந்தம், செரியாமை, மலச்சிக்கல், போன்ற நோய்கள் எளிதில் பற்றும்.
வேட்டைக்குச் செல்லும் வேடருடைய நாய்கள் இரையைக் கவ்வுதல் போல் இரவில் நித்திரையில்லாதவரை பற்பல நோய்கள் கவிக் கொள்ளும்.
எந்த திசையில் தலை வைத்து படுக்க வேண்டும் என்பதை சித்தர்கள் அன்றே தெளிவாகக் கூறியுள்ளனர்.
உத்தமம் கிழக்கு, ஓங்குயிர் தெற்கு, மத்திமம் மேற்கு, மரணம் வடக்கு.
கிழக்கு திசையில் தலை வைத்து படுப்பது மிகவும் நல்லது. தெற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் ஆயுள் வளரும். மேற்கு திசையில் தலை வைத்துப் படுத்தால் கனவு,அதிர்ச்சி உண்டாகும். வடக்கு திசையில் ஒரு போதும் தலை வைத்து தூங்கக் கூடாது.
இதனை விஞ்ஞான ரீதியாகவும் ஒப்புக்கொண்டுள்ளனர். வடக்கு திசையில் இருந்து வரும் காந்தசக்தி தலையில் மோதும் போது அங்குள்ள பிராண சக்தியை இழக்கும். இதனால் மூளை பாதிக்கப் படுவதுடன், இதயக் கோளாறுகள், நரம்புத்தளர்ச்சி உண்டாகும்.
மேலும் மல்லாந்து கால்களையும், கைகளையும் அகட்டி வைத்துக் கொண்டு தூங்கக் கூடாது. இதனால் இவர்களுக்குத் தேவையான ஆக்ஸிஜன் [பிராண வாயு] உடலுக்குக் கிடைக்காமல் குறட்டை உண்டாகும். குப்புறப் படுக்கக் கூடாது, தூங்கவும் கூடாது.
இடக்கை கீழாகவும், வலக்கை மேலாகவும் இருக்கும்படி கால்களை நீட்டி இடது பக்கமாக ஒருக்களித்து படுத்து தூங்கவேண்டும். இதனால் வலது மூக்கில் சுவாசம் சூரியகலையில் ஓடும். இதில் எட்டு அங்குலம் மட்டுமே சுவாசம் வெளியே செல்வதால் நீண்ட ஆயுள் வளரும். மேலும் இதனால் உடலுக்குத் தேவையான வெப்பக்காற்று அதிகரித்து பித்தநீரை அதிகரிக்கச்செய்து உண்ட உணவுகள் எளிதில் சீரணமாகும். இதயத்திற்கு சீரான பிராணவாயு கிடைத்து இதயம் பலப்படும்.
வலது பக்கம் ஒருக்களித்து படுப்பதால் இடது பக்க மூக்கின் வழியாக சந்திரகலை சுவாசம் ஓடும். இதனால் பனிரெண்டு அங்குல சுவாசம் வெளியே செல்லும். இதனால் உடலில் குளிர்ச்சி உண்டாகும். இரவில் உண்ட உணவு சீரணமாகாமல் புளித்துப் போய் விஷமாக நேரிடும்.

திங்கள், 7 ஜூன், 2021

அம்மன் பச்சரிசி மூலிகையின் மகத்துவம்.. தாது உற்பத்தியை அதிகரிக்கும் ஒரு வெள்ளி பஸ்பமாகும்...

 உடம்பில் தாதுவைப் பலப்படுத்த பல மூலிகைகளைக்கொண்டு தயாரிக்கப்பட்ட தங்க பஸ்பத்தைப் பற்றி கேள்விப்பட்டிருப்பீர்கள். சித்த வைத்தியர் என்ற பெயரில் நடமாடும் பல போலி ஆசாமிகள் தங்கபஸ்பம் என்ற பெயரில் எதை எதையோ விற்று காசு பார்த்து வருகிறார்கள். ஆனால், எந்தச் செலவும் இல்லாமல் இயற்கையிலேயே இலவசமாக கிடைக்கிறது ஒரு மூலிகை. இதை இன்ஸ்டன்ட் காபி போல, இன்ஸ்டன்ட்டாக பயன்படுத்தலாம். இந்த மூலிகைக்குத் தாதுவை அதிகரிக்கும் தன்மை உண்டு. அதனால் இதை வெள்ளி பஸ்பம் என்கிறார்கள். நாம் தினமும் கடக்கும் சாலையோரங்கள், விவசாய நிலங்கள், வரப்புகள், வாய்க்கால் ஓரங்களில் சர்வசாதாரணமாக ஒரு களைச் செடியைப் போல் முளைத்து கிடக்கிறது அந்த மூலிகை. நாம் அதன் மகத்துவம் அறியாமல், காலில் போட்டு மிதித்துவிட்டு கடந்து கொண்டேயிருக்கிறோம். ஆனாலும் நம்மீது கோபம் கொள்ளமால், தனது விதைகள் மூலமாக, தனது சந்ததிகளை வளர்த்துக்கொண்டே இருக்கிறது அந்த மூலிகை. மனித குலத்துக்குத் தேவையான பல அரிய மருத்துவ குணங்களைக் கொண்ட அந்த மூலிகையின் பெயர்

இப் ஃபோர்பியா ஹிர்டா(Euphorbia hirta) என்ற தாவரவியல் பெயர் கொண்ட அம்மான் பச்சரிசி இந்தியாவைத் தாயகமாகக் கொண்டது. தீக்காயங்கள், சூட்டினால் ஏற்படும் கட்டிகள், வயிற்றுப்போக்கு, நமைச்சல் ஆகியற்றுக்கு இது அருமருந்து. இந்தச் செடியைப் பறித்து நிழலில் உலர்த்தி பொடி செய்துகொள்ள வேண்டும். ஒரு ஸ்பூன் பொடியுடன் சமஅளவு கற்கண்டு சேர்த்து பாலில் கலந்து தினமும் இருவேளை குடித்து வந்தால் ஆண்களுக்கு விந்தணுக்கள் அதிகரிக்கும். இந்தச் செடியின் எந்தப் பாகத்தை உடைத்தாலும் பால் வரும். அதனால் இதை, ‘சித்திரைபாலாடை’ எனவும் அழைக்கிறார்கள் சித்த மருத்துவர்கள். இந்தப் பால் மருத்துவ தன்மை வாய்ந்தது. உதடு, நாக்கு போன்ற பகுதிகளில் ஏற்படும் வெடிப்புகளை போக்கும் தன்மை இந்த பாலுக்கு உண்டு.
குழந்தைகளுக்கு நோய் எதிர்ப்புச் சக்தி கொடுப்பது தாய்ப்பால். ஆனால், நவீன உணவுப் பழக்கம் காரணமாக பல பெண்களுக்குப் பால் சுரப்பதேயில்லை. அதனால் ஆவின்பால் குடித்து வளர்கிறது வருங்கால இந்தியா. இதனால் நோய் எதிர்ப்பு சக்தியில்லாமல் ஐந்து வயதிலேயே கண்ணாடி அணிந்துக்கொள்கிறார்கள். இன்னும் சில நோய்தொற்றுக்கு ஆளாகிறார்கள். ஆரோக்கியமான குழந்தைகளை தாய்ப்பால் தான் உருவாக்க முடியும். சரி என்ன செய்ய அதான் இல்லியே என ஆதங்கப்படும் தாய்மார்களுக்கு உதவுவதற்காகவே காத்திருக்கிறது அம்மான் பச்சரிசி. இந்த மூலிகையின் பூக்களை சுத்தம் செய்து, பசும் பால் விட்டு அரைத்து, காலை, பசும்பாலில் கலந்து காலை, மாலை இருவேளையும் பருகி வந்தால் பால் நன்றாக சுரக்கும்.
உடம்பில் ஆங்காங்கே சின்னச் சின்னக் கட்டியாக தொங்கும் மரு, இன்றைக்கு பலபேருக்குத் தொல்லையாக இருக்கிறது. இந்த மருவை சுலபமாக அகற்ற உதவுகிறது அம்மான் பச்சரிசி. இதன் தண்டை உடைத்தால் பால் வரும். அந்தப் பாலை மருவின் வேர் பகுதியில் தடவி வர வேண்டும். தொடர்ந்து இதைச் செய்து வந்தால் மரு உதிர்ந்துவிடும். மருவின் தன்மைக்கு ஏற்ப மூன்று முதல் ஏழு நாள்களில் உதிர்ந்து விடும். மிகச் சுலபமாக மருவை அகற்ற இதைவிட சிறந்த வழியேதுமில்லை. அதனால்தான் இதை ‘மருஅகற்றி’ என அழைத்தனர் சித்தர் பெருமக்கள். அதேப் போல, சிலருக்கு காலில் ஆணி ஏற்படும். இதை அறுவைசிகிச்சை மூலமாக அகற்றுவார்கள். ஆனால், அது தேவையில்லாத ஒன்று. அம்மான் பச்சரிசி பாலை ஆணி உள்ள இடத்தில் தொடர்ந்து தடவி வந்தால், வலி குறைந்து சிறிது நாளில் ஆணி மறைந்துவிடும்.🌺🌸
‘காந்தல் விரணமலக் கட்டுமே கந்தடிப்புச்
சேர்ந்த தினவிவைகள் தேகம்விட்டுப்பேர்ந் தொன்றாய்
ஓடுமம்மான் பச்சரிசிக் குண்மை இனத்துடனே
கூடுமம்மா னொத்த கண்ணாய் கூறு!’ (அகத்தியர் குணபாடல்)
இதன் இலைச் சாறை பருகினால் உடல்மெலிவு, மலச்சிக்கல், படை, நமைச்சல் போகும் என்கிறது இந்த பாடல்.
வெள்ளைப்படுதல் பெண்களுக்குள்ள பெரிய பிரச்னை. அதற்கு
அருமையான
தீர்வு அம்மான் பச்சரியிடம் இருக்கிறது. இதன் இலையைப் பறித்து, கழுவி சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். இந்தச் சாறுடன் மோர் கலந்து காலை, மாலை இருவேளையும் பருகி வந்தால் ஐந்தே நாளில் வெள்ளைப்படுதல் நின்றுபோகும் என்கிறது சித்த மருத்துவம்.
அதெல்லாம் சரி, அம்மான் பச்சரிசி எப்படி வெள்ளி பஸ்பமாகும்?
அம்மான் பச்சரிசி இலை, தூதுவேளை இலை ஆகிய இரண்டையும் சம அளவு எடுத்து பாசிபருப்பு, உளுந்தம் பருப்பு, தேங்காய் துருவல் ஆகியவற்றுடன் சேர்த்து கூட்டு செய்து, நெய் சேர்த்து உண்டு வந்தால் உடம்பில் தாது பலப்படும். விந்தணுக்கள் அதிகரிக்கும். அதனால் தான் சித்த புருஷர்கள் இதை வெள்ளி பஸ்பம் என்கிறார்கள். இத்தனை சிறப்புகளை வைத்திருக்கும் அம்மான் பச்சரிசி மூலிகையை சின்னச் சின்னத் தொட்டிகள் வைத்து வீடுகளில் கூட வளர்க்கலாம்.
முன்னோர்கள் வழி தகவல்கள் 🌺🌸

சனி, 5 ஜூன், 2021

சிறு நீரகக்கல் பிரச்சனையா? - கு பண்பரசு - நாட்டு மருத்துவம்

 

😴

சிறு நீரகக்கல் பிரச்சனையா?

கவலை வேண்டாம்.
சிறு நீரகக்கல் இருந்தவர்கள் வலி தாங்க முடியாமல் டாக்டர் இடம் சென்றிருப்பீர்கள் ! அவரும் எல்லா சோதனைகளும் முடித்து மருந்துகள் கொடுப்பார் பிறகு மீண்டும் வலி வரும் மீண்டும் சோதித்து ஆபரேஷன் தான் வழி என்றும் 30 ஆயிரம் முதல் 40 ஆயிரம் வரை செலவு வைப்பார்.
நீங்களும் வேறு வழியின்றி வலி தாங்காமல் ஆபரேஷன் செய்து பணத்தை கட்டி அழுவீர்கள்!
ஆனால் சிறு நீரகக்கல் பிரச்சனை மீண்டும் மீண்டும் வரும் எத்தனை முறை டாக்டர் இடம் பணத்தை கொட்டி அழுவது?
சரி இனி விசயத்திற்கு வருகிறேன்,
சிறு பீளைச்செடி........
இதன் தாவரப் பெயர் : Aervalanata.
தாவரக்குடும்ப பெயர்: Amarantaceae.
இதன்வேறுப் பெயர்கள்: சிறு பீளை, சிறுகண் பீளை, கண் பீளை, கற்பேதி. காப்பூக்கட்டு பூச்செடி,கூரைப்பூச் செடி என்பார்கள்.
இதை பொங்கலன்று பெரும்பாலான வீடுகளில் வாசலில் கட்டி வைப்பார்கள்.
இது சிறு செடிவகையை செர்ந்தது. ஈரப்பாங்கான இடங்களில் பரவலாக வளர்கிறது. இதன் இலைகள் சிறியதாக சிறிது நீண்ட வட்டவடிவில் இருக்கும். ஒவ்வொரு இலைக்கும் இடையில் பூக்கள் தண்டுடன் ஒட்டியவாறு அவல் போன்ற வடிவத்தில் வெண்மை நிறத்தில் இருக்கும்.இதன் தண்டு, பூ, இலை, வேர் அனைத்தும் மருந்தே!
இதன் பலன் சிறு நீரைப் பெருக்கி கற்களை கரைக்கும்.!
ஈரப்பாங்கான இடங்களில் இது நன்றாக வளர்ந்து இதன் இலைகள் பசுமையாக இருக்கும். மற்ற இடங்களில் இலைகள் சிறுத்து பூக்கள் மட்டும் அதிகமாக இருக்கும்.
சாப்பிடும் முறை: இதன் பூ, இலை, தண்டு, வேர் எதுவாகினும் எடுத்து சுமார் 10 கிராம் அல்லது இவைகளை அரைத்தால் நெல்லிக்காய் அளவு. இதனுடன் கரு மிளகு 7 அரைத்தால் கிடைக்கக் கூடிய தூள் சேர்த்து காலை வெறும் வயிற்றில் ஒரு டம்ளர் மோரில் கலந்து குடிக்க வேண்டும். சுமார் 1 மணி நேரத்திற்குப் பிறகு உணவு சாப்பிடலாம்! பத்தியம் கிடையாது!
இது போன்று இரவும் சாப்பிடனும். இது நோய்க்கு தக்கவாறு ஏழு நாட்களிருந்து பத்து நாட்கள் வரை சாப்பிடலாம்.
மற்றொரு சாப்பிடும் முறை: இதை வேறுடன் எடுத்து பனை வெள்ளம் சம அளவில் சேர்த்து அரைத்து 200 ml
பாலுடன் கலந்து இருவேளை சாப்பிடலாம்.
இதை உட்கொள்ளும் போது மருந்து
வேளை செய்தால் சிலருக்கு
வலி வரலாம் பயப்பட வேண்டாம். டாக்டர் வலிக்காக பரிந்துரைத்த மாத்திரையை எடுத்துக்கொள்ளலாம்.
இந்த செடி கிராமங்களில் நிறைய விளைந்து கிடக்கிறது. இதை ஆடு, மாடுகள் உண்பதில்லை.
இச்செடி உங்கள் ஊரில் இல்லை என்றால் கவலை வேண்டாம்நாட்டு மருந்து கடைகளில் பவுடராகவும் கிடைக்கிறது. அதை வாங்கி உபயோகப்படுத்தலாம்.
சிறு நீரகக்கல் வந்தவர்கள் ஆபரேஷன் செய்திருப்பினும்
மருந்து உட்கொண்டு சரியாகி இருப்பினும் மீண்டும் மீண்டும் தொல்லை தரும்! அப்பொழுதெல்லாம் இதனை உட்கொண்டு உங்கள் உடலையும், பணத்தையும் பாதுகாத்துக் கொள்ளலாம்.
முகநூலில் இருந்து எடுக்கப்பட்டது.

👍 கு பண்பரசு

சரம்- அறிந்து கொள்ளவும்

 சரம் பற்றி அறிந்து கொள்வது மிகவும் பயனுள்ளது. ஞான சர நூலிலிருந்து படித்தவற்றை பகிர்ந்துள்ளேன்.

நமது மூச்சுக்காற்றானது வலது இடது நாசிகள் வழியே வெளியேறுகிறது. அவ்வாறு வெளியேறுவதை கிழமைகளைப் பொறுத்து பிரிக்கப்பட்டுள்ளது.]

ஞாயிறு, சனி மற்றும் திங்கட்கிழமைகளில் - வலது நாசி வழியே வெளியேற வேண்டும்.

செவ்வாய், புதன், வெள்ளிக்கிழமைகளில் - இடது நாசி வழியே வெளியேற வேண்டும்.

வலது நாசியின் வழியே வெளியேறுவதை பிங்கலை- சூரிய திசை

இடது நாசியின் வழியே வெளியேறுவதை - இடகலை - சந்திரதிசை

வியாழக்கிழமை இரண்டு நாசிகள் வழியே வெளியேற வேண்டும்.

இரண்டு நாசிகள் வழியே வெளியேறுவதை - கழினை -சுழி 

என்று சர நூலில் குறிக்கப்பட்டுள்ளது.

மேலும் மூச்சுக்காற்றானது ஒரு குறிப்பிட்ட நேர அளவுகளிலேயே அவ்வாறு வெளியேறும் என்பதும் குறிப்பிடப்பட்டுள்ளது.


இவற்றில் ஏதேனும் மாற்றத்துடன் நிகழ்ந்தால் உடலில் நோய் ஏற்பட்டுள்ளது என்று அர்த்தமாம்...

இவை அனைத்தும் ஞான சர நூலில் இடம்பெற்றுள்ளது.

அனைவரும் அந்த நூலைப் படித்து பயன்பெறுங்கள்.

மேலும் பல தகவல்களை அடுத்த பதிவில் தருகிறேன்.

வெள்ளி, 21 மே, 2021

படித்ததில் பிடித்தது மூச்சுத்திணறல் மருத்துவம் - திருநீற்றுப்பச்சிலை

மூச்சுத் திணறல் ஏற்படாமல் இருக்க முனிவர்கள் சித்தர்கள் பயன்படுத்திய மூலிகையின் இரகசியம் திருநீற்று பச்சிலை எனும் மூலிகையின் இலைகளை பத்து எடுத்து இதை கசக்கி முகர்ந்து வந்தால் மூக்கடைப்பு நீங்கும் மூச்சுத்திணறல் விலகும் சுவாசம் சீராக நடைபெறும் பிராண சக்தியை குறைவின்றி பெறுவதற்காக சித்தர்கள் வாழ்ந்த குகையின் முன் வாசலில் திருநீற்றுப் பச்சிலை எனும் மூலிகையை வளர்த்து வந்தார்கள் என்பது கோரக்கர் அருளிய சந்திரரேகை என்னும் நூலே இதற்கு சான்றாக விளங்குகின்றது திருநீற்றுப் பச்சிலையை கஷாயமாகவோ அல்லது பொடியாகவோ செய்து சாப்பிட்டு வந்தால் சுவாசம் சீராக நடைபெறுவதோடு சுவாசப் பாதையில் ஏற்படும் அலர்ஜி மற்றும் கிருமி தொற்று ஏற்படுவது தடுக்கப்படும் மேலும் உடலுக்குத் தேவையான பிராண சக்தி முழுமையாக கிடைக்கும் சுவாச மண்டலம் சீராக இயங்க திருநீற்றுப் பச்சிலை தூதுவளை இரண்டையும் சம அளவாக பொடி செய்து இதில் ஐந்து கிராம் எடுத்து முந்நூறு மில்லி தண்ணீரில் கலந்து பாதியாக சுண்டக் காய்ச்சி காலை மாலை இருவேளையும் தொடர்ந்து பருகி வர தொண்டையில் உண்டாகும் கபமும் நுரையீரலில் ஏற்படும் சளியும் நீங்கி சுவாச தொந்தரவுகள் அனைத்தும் குணமாகி உடலுக்கு தேவையான பிராண சக்தி அதிகமாக கிடைக்கும் தினமும் உறங்குவதற்கு அரை மணி நேரத்திற்கு முன்னதாக காய்ச்சி ஆறவைத்த பசும் பாலில் மூன்று கிராம் குப்பைமேனி பொடியை கலந்து பருகிவர நெஞ்சு வலி நீங்கும் மூச்சுத்திணறல் குணமாகும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கும் சுவாச பிரச்சனைகள் நீங்கி சீராக சுவாசம் நடைபெற இது உதவும் அனைத்து வகையான விஷ கிருமிகளின் தொற்றுகளை அழிக்கும் ஆற்றல் குப்பைமேனிக்கு உண்டு வாரத்திற்கு இரண்டு நாட்கள் மதிய உணவில் குப்பைமேனிக் கீரையை பொரியலாகச் செய்து சாப்பிட்டு வர எந்த விதமான வைரஸ் கிருமிகளும் உடலில் தோன்றாது இது உறுதி இரண்டு கைப்பிடி நொச்சி இலையை தண்ணீரில் வேகவைத்து இரண்டு சிட்டிகை மஞ்சள் தூள் கலந்து இதில் வரும் நீராவியில் வேது பிடித்து வர சுவாச தொந்தரவுகள் அனைத்தும் நீங்கும் சுவாசம் தங்குதடையின்றி சீராக நடைபெறும் வளமுடன் வாழ வாழ்த்துக்கள்

செவ்வாய், 27 ஏப்ரல், 2021

சிறுநீரக செயலிழப்புக்கு சரியான நாட்டு மருந்துவம்

நீரிழிவு நோய்க்கு மருந்துகள் சாப்பிட்டு இரண்டு சிறுநீரகமும் செயலிழந்து விட்டநிலையில் எப்போது வேண்டுமானாலும் உயிர் பிரியலாம் என்ற நிலை. உடல் முகம் உயிர் நிலை கால்கள் எல்லாம் வீங்கிய நிலையில் சொந்த ஊருக்கு கொண்டு வந்து உறவுகளை இறுதியாக பார்க்க அழைக்கின்றனர். ஊரே அழுகிறது. அந்த ஊரைச்சேர்ந்த உறவினர் ஒருவர் தன் மகனை அழைத்துக் கொண்டு அவரை பார்க்க சென்றார்... கண்ணீர் விட்டு அழுதுவிட்டு ஆறுதல் கூறி ஆயிரம் ரூபாயை அவரிடம் அளித்தார். அப்போது அவர் மகன் (தான் படித்த...நம் முன்னோர்களின் அற்புத ஆய்வு தந்த அறிவை மற்றவர்களும் பயன்பெற வேண்டும் என்ற நல்லெண்ணத்தில்)ஒரு வார்த்தை தந்தையிடம் ஒப்புதல் பெற்று பேசினார்... "மூக்கிரட்டை இலைகளை" அரைத்து சாறெடுத்து பழைய கஞ்சியில் (சோற்றை பிழிந்து எடுத்து விட்டு) மூக்கிரட்டை சாறு கலந்து" 1 வாரம் குடித்து வரச்சொன்ன அந்த இளைஞர்... உங்கள் குலதெய்வத்தை வணங்கி நம்பிக்கையோடு மேற்கண்ட மருந்தை உட்கொள்ளுங்கள் பரிபூரண குணமாவீர்கள் என்றார். மூன்று நாளில் ... எழுந்து அவராக நடந்து சிறுநீர் கழித்ததாகவும் ...2 நாளில் முகம் உடல் வீக்கம் குறைந்ததாகவும், நேற்று தோசை உணவுகள் சாப்பிட்டு நன்றாக உள்ளார் என்பதை கேள்விப்பட்டு மகிழ்ச்சி அடைந்தார்... இன்று பரிபூரண குணம் அடைந்து விட்டார். "உணவே மருந்தென்று" வாழ்ந்த தமிழனின் பெருமையை சொல்வேனா? அதிசயம் அற்புதம் ஆச்சரியம் ஆனால் உண்மை சிறுநீரகம் பாதித்தோர் பல கோடி செலவழிக்க வேண்டாம். மூக்கிரட்டை இலைச் சாறு பழைய கஞ்சி போதும். நன்றி: Dr.G .S. ராஜதுரை.,M.B.B.S ., P.G.DIP.Us G /G.S. கிளினிக் கறம்பக்குடி புதுக்கோட்டை மாவட்டம் .9865224588

சனி, 13 மார்ச், 2021

மண்பாண்டங்கள் பற்றிய வரலாற்று செய்திகள் மற்றும் மண்பாண்டங்களின் நன்மைகள்

எழுத்தறிவுக்கு முந்தைய தொல்பழங்காலக் கலாச்சாரத்தை சார்ந்ததாக உள்ளது மண்பாண்டக்கலை. மண்பாண்டம் என்பது களிமன் வகைகளை கொண்டு தயாரிக்கப்படுகிறது. மண்பாண்டத்தொழில் உலகின் மிகப் பழமையான தொழில். தமிழில் குயத்தொழில் என்றும், மண்பாண்டங்கள் செய்பவர்கள் குயவர்கள் என்றும் அழைக்கின்றனர்.

நம் வாழ்வில் இருண்டுரக் கலந்த மண்பானை கால மாற்றத்தால் மறைந்துவருகிறது.தமிழ்நாட்டில் திருவாரூர், போடிநாயக்கனூர், தேனி, தஞ்சாவூர், மானாமதுரை போன்ற இடங்களில் பரவலாக மண்பான்டத் தொழில் செய்யப்பட்டு வருகிறது.

மண்ணை நன்றாகக் குழைத்து அதனுடன் நாட்டு சர்க்கரை அல்லது பனைவெல்லம் அல்லது கருப்பட்டி , உப்பு , கடுக்காய் , வண்ண பவுடர்கள் (வண்ணத்துக்காக) சேர்த்து நன்றாக குழைத்து. அதற்காகவே செய்யப்பட்டுள்ள வண்டிச்சக்கரத்தின் நடுவில் வைத்து அச்சக்கரம் வேகமாக சுழலும்போது பானை செய்யவார்கள். மண்பானையில் பல வகைகள் உண்டு. ஒவ்வொன்றிற்கும் அதன் பயன்பாட்டைப் பொருத்து தனித்தனி பெயர்களும் உண்டு.

குறிப்பாக நெல்மணிகள் சேமித்து வைக்க பெரும்பாலும் குதிர்கள் (அகப்பானை) பயன்படுத்தப்படுகிறது. தஞ்சாவூர், பேராவூரணி, பட்டுக்கோட்டை, புதுக்கோட்டை போன்ற மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் அனைவரின் வீட்டிலும் இந்த குதிர் (அகப்பானையை நீங்கள் பார்க்கலாம். இந்த குதிர் ஒரு ஆள் உயரத்திற்கு இருக்கும்).

இவ்வாறு வெவ்வேறு இடங்களில் பலவிதமான பானைகள் பலவிதமான பெயர்களில் அழைக்கப்படுகிறது.

ஒருகாலத்தில் மண்பாண்டங்கள் விற்பனை பிரபலமாக இருந்து வந்தது. காலப்போக்கில் தொழில்நுட்ப வளர்ச்சி மற்றும் மண் தட்டுப்பாடு போன்ற மண்பாண்டங்கள் தொழில் நலிவடைந்து மீண்டும் புத்துணர்ச்சி பெற்று வருகிறது.

களிமண்ணுடன் நீர் சேர்த்துக் குழைக்கப்பட்ட களிமண்ணை சூழையில் இட்டு மண் சட்டியில் செய்த மீன் குழம்புக்கு இருக்கும் வாசனை வேறு எந்தப் பாத்திரத்தில் செய்தாலும் வராது. நம் முன்னோர்களுக்கு மட்டும் தான் தெரியும் மண் சட்டியின் (பாத்திரங்களின்) அருமைகள்.

மண்பானைகளில் வெவ்வேறு வடிவங்களில் வெவ்வேறு விதமாக வடிவமைக்கப்பட்டு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. தண்ணீர் சேமித்து வைக்க, தானியங்கள் சேமித்து வைக்க, குழம்பு வைக்க, சாப்பாடு வைக்க, பொங்கல் வைப்பதற்க்கு என்று அதற்கேற்றாற்போல் வடிவமைக்கப்பட்டு விற்கப்படுகிறது.

களிமண்ணினால் செய்யப்படும் பொம்மைகள் மற்றும் விளையாட்டுப் பொருட்களை ஒரு நாளும் வாழ்வில் மற்றக்க இயலாது. எந்த ஒரு தீங்கையும் குழந்தைகளுக்கு விளைவிக்காத விளையாட்டுப் பொருட்கள் களிமண் பொம்மைகள்.

மண்பாண்டங்களினால் ஏற்படும் நன்மைகள்:

  • மண்பாண்டங்களில் செய்யும் உணவுகள் உடலுக்கு ஆரோக்கியத்தையும் நீண்ட ஆயுளையும் தரக்கூடியது.
  • மிகச்சிறந்த நீர் வடிகட்டியாக் மண்பானை உள்ளது. பிராண சக்தி அதிகரிக்க மண்பானை மிகவும் உதவிகரமாக உள்ளது.
  • மண்பாண்டங்களில் ஊற்றி வைக்கும் நீர் குளிர்ச்சியாக இருக்கும். இதற்கு காரணம் மாண்பாண்டங்களில் உள்ள துளைகள் வழியாக ஆவியாதல் நடைபெறுவதால்தான். குடிநீரை இயற்க்கையாக சுத்திகரிக்கும் ஆற்றல் பெற்றது மண்பானை.
  • நமது முன்னோர்கள் மண்பாண்டங்களை பயன்படுத்தியதால்தான் இன்றளவும் ஆரோக்கியமாக இருக்கின்றார்கள். இன்றும் முடி நிரைக்காத மூதாட்டியை நாம் காணலாம்.
  • மண்பானையில் ஊற்றி வைக்கப்படும் மோர் விரைவில் கெட்டுப்போகாமல் இருக்கும்.
  • மண்பானையில் சமைக்கப்படும் உணவு நீண்ட நேரம் கெட்டுப்போகாமல் இருக்கும். மேலும் உணவின் ருசியையும் கூட்டும் தன்மையுடையது மண்பாண்டம்
  • மண்பானையில் உள்ள களிமண் காரத்தன்மை உடையது என்பதால் நாம் சமைக்கும் உணவில் உள்ள காரத்தன்மையுடன் கலந்து உணவில் அமில காரத்தன்மையை சரிசெய்கிறது.
  • இயற்கையோடு ஒன்றி வாழ்வதை தவிர்த்து விட்ட காரணதால் இன்று இந்த குயவனின் வாழ்க்கை கேள்விக் குறியாக உள்ளது. இயற்கையோடு ஒன்றி வாழ்ந்து நம் பாரம்பரிய பெருமைகளை அழிவுக்குச் செல்லாமல் பாதுக்காப்பது நமது கடமை.

குறிப்பு:

நமது பாரம்பரியமான மண்பான்டங்களின் பெயர்களை சற்று உச்சரித்துப் பாருங்கள்.

  • அஃகப் பானை - தவசம்(தானியம்) சேர்த்து வைக்கப் பயன்பெறும் பானை (குதிர், குறுக்கை) அஃகம்- தவசம்
  • அஃகுப் பானை - வாயகன்றும் அடிப்புறம் சுருங்கியும் தோன்றும் பானை.
  • அகட்டுப் பானை - நடுவிடம் பருத்த பானை
  • அடிசிற் பானை - சோறு ஆக்குவதற்குப் பயன்பெறும் பானை.
  • அடுக்குப் பானை - நிமிர்வு முறையில் அல்லது கவிழ்வு முறையிலாக ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கப்பெறும் பானை வரிசை. திருமணச் சடங்கு மேடையில் அடுக்கப்பெறும் ஏழுபானை வரிசை.
  • அரசாணிப்பானை - திருமணச் சடங்கு மேடையில் நாட்டப் பெறும் அரசாணிக் காலுக்குப் பக்கத்தில் வைக்கப் பெறும் மங்கலப் பானை.
  • உசும்பிய பானை - உயரம் மிகுந்த பானை.
  • உறிப் பானை - உறியில் வைத்தற்கு ஏற்ற பானை
  • எஃகுப் பானை - இரும்பு உருக்கி எடுக்கவுதவும் பானை
  • எழுத்துப் பானை - எழுத்துகள் வரையப் பெற்ற பானை
  • எழுப்புப் பானை - உயரம் வாய்ந்த பானை
  • ஒறுவாயப் பானை - விளிம்பு சிதைந்த பானை
  • ஓதப் பானை - ஈரப் பானை
  • ஓர்மப் பானை - திண்ணிய பானை, தட்டினால் நன்கு ஒலியெழும்பும் பானை
  • ஓரிப் பானை - தனிப் பானை, ஒல்லியான பானை
  • ஓவியப் பானை - ஓவியம் வரையப் பெற்ற பானை, வண்ணம் தீட்டப்பட்ட பானை
  • கஞ்சிப் பானை - கஞ்சியை வடிதத்ற்குப் பயன்பெறும் அகன்ற வாயுடைய பானை
  • கட்டப் பானை - அடிப்பகுதி வனையப்படாத பானை
  • கட்டுப் பானை - மிதவை அமைத்தற்கென அம்மிதவையின் ஓரத்தில் கட்டப்பெறும் பானை )
  • கதிர்ப் பானை - புதிய நெற்கதிர்களையும். நெல்மணிகளையும் வைத்தற்குப் பயன்பெறும் பானை
  • கரகப் பானை - கரவப்பானை - நீர்க்கரகம்
  • கரிப்பானை - கரி பிடித்த பானை
  • கருப்புப் பானை - முழுவதுமாகக் கருநிளம் வாய்ந்த பானை
  • கருப்பு - சிவப்பு பானை - உள்ளே கருநிறமும் வெளியே செந்நிறமும் வாய்ந்த பானை
  • கலசப் பானை - கலயம், கலசம், கலம், நீர்க்கலம்
  • கழுநீர்ப் பானை - அரிசி முதலிய கூலங்களைக் கழுவிய நீரை ஊற்றி வைத்தற்குப் பயன்பெறும் பானை (பேச்சு வழக்கில் கழுனிப் பானை எனப்படுகின்றது)
  • காடிப் பானை - கழுநீர்ப் பானை
  • காதுப் பானை - விளிம்பில் பிடியமைத்து உருவாக்கப் பெறும் பானை
  • குண்டுப் பானை - உருண்ட வடிவத்தில் தோன்றும் பானை
  • குறைப் பானை - அடிப்பகுதியில்லாத பானை, அடியிலி (பேச்சு வழக்கில் குறுப்பானை என்னப் பெறுகின்றது)
  • கூடைப் பானை - கூடை வடிவில் உருவாக்கப் பெறும் பானை
  • கூர்முனை பானை - அடிப்புறம் கூர்முனை அமையும் படியாக உருவாக்கப் பெற்ற பானை
  • கூர்ப் பானை - கூர் முனைப் பானை
  • கூழ்ப் பானை - கூழ் காய்ச்சுதற்கெனப் பயன்படுத்தப் பெறும் பானை
  • கோளப் பானை - உருண்டு திரண்ட பானை
  • சருவப் பானை - மேற்புறம் அகற்சியாகவும் - கீழ்ப்புறம் சரிவாகவும் சுருங்கியும் ஆக உருவாக்கப் பெற்ற பானை.
  • சவப்பானை - சவம் இடுதற்கேற்ப உருவாக்கப் பெற்ற பெரிய பானை, ஈமத்தாழி
  • சவலைப் பானை - நன்கு வேகாத பானை, மெல்லிய பானை
  • சன்னப் பானை - மெல்லிய பானை, கனமில்லாத பானை
  • சாம்பல் பானை - கையால் செய்யப் பெற்ற பானை
  • சொண்டுப் பானை - கனத்த விளிம்புடைய பானை
  • சோற்றுப் பானை - சோறாக்குவதற்குப் பயன்பெறும் பானை
  • சில்லுப் பானை - மிகச் சிறிய பானை
  • சின்ன பானை - சிறிய பானை
  • தவலைப் பானை - சிறிய வகைப் பானை( நீர் சேமிக்க உதவுவது)
  • திடமப் பானை - பெரிய பானை (திடுமுப் பானை)
  • திம்மப் பானை - பெரும்பானை (திம்மம் - பருமம்)
  • துந்திப் பானை - தொந்தியுறுப்புப் போன்று அடிப்பாகம் மிகவுருண்டு திரண்ட தோற்றம் அமைந்த பானை
  • தொண்ணைப் பானை - குழிவார்ந்த பானை
  • தோரணப் பானை - கழுத்துப் பாகத்தைச் சுற்றிலும் தோரணவடிவில் உருவெட்டப் பெற்ற பானை
  • தோள் பானை - தோளில் (சுவற்பகுதியில்) தொங்கவிட்டுப் பயன்படுத்துதற்கேற்றவாறு உருவமைந்த பானை
  • நாற்கால் பானை - நான்கு கால் தாங்கிகளை உடன் கொண்டிருக்குமாறு அமைக்கப் பெற்ற பானை
  • பச்சைப் பானை - சுடப்பெறாத பானை
  • படரப்பானை - அகற்ற - பெரிய பானை
  • பிணப் பானை - சவப்பானை, ஈமத்தாழி
  • பொள்ளற் பானை - துளையுள்ள பானை (பொள்ளல் பானை)
  • பொங்கல் பானை - பொங்கல் விழாவிற்குரிய பானை
  • மங்கலக் கூலப் பானை - திருமண விழா மன்றலில் தவசம் நிறைத்து வைக்கப் பெறும் பானை
  • மடைக்கலப் பானை - திருமண வீட்டில் அல்லது மடங்கள் அல்லது கோயில்களில் சமையலுக்குப் பயன்படுத்துவதற்கு உருவாக்கப் பெற்ற பானை
  • மிண்டப் பானை - பெரிய பானை
  • மிறைப் பானை - வளைந்து உயர்ந்த பானை
  • முகந்தெழு பானை - ஏற்றப் பானை
  • முடலைப் பானை - உருண்டையுருவப் பானை
  • முரகுப் பானை - பெரிய பானை ( திரண்டு உருண்ட பானை)
  • மொங்கம் பானை - பெரும் பானை (மொங்கான் பானை)
  • மொட்டைப் பானை - கழுத்தில்லாத பானை
  • வடிநீர்ப் பானை - நீரை வடிகட்டித் தருதற்கேற்ப அமைக்கப் பெற்ற நீர்க்கலம்
  • வழைப் பானை - வழவழப்பான புதுப்பானை
  • வெள்ளாவிப் பானை - துணி அவித்தற்குப் பயன் பெறும் பானை

இயற்கையோடு இணைந்து வாழ முயற்சி செய்வோம்.

மருதாணி

  சர்க்கரை நோய் ஏற்படுவதற்கும் மருதாணி வைக்கும் பழக்கம் குறைந்ததும் ஓர் காரணம் ஆகும் ..... உடல் குளிர்சியாக இருக்கும் போது மட்டுமே கணையம் இன...